தமிழகத்தில் புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எல்ஐசி யுடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்கும். அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் சலுகைகளுடன் நீட்டிக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.