Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்பியதால் அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் பாதிப்பு குறைவான மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆக்சிஜனை அனுப்பியுள்ளது.

Categories

Tech |