Categories
ஈரோடு மாநில செய்திகள்

இன்று முதல் மளிகை பொருட்கள் தெருத்தெருவாக விற்பனை செய்ய அனுமதி…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் காய்கறிகள்,பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்ய இன்று முதல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக சென்னையில் 7,500க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் மொபைல் எண்கள் www.chennaicorporation.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |