தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவணையை ஏற் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த வருடம் 10 புதிய பாதை திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் தமிழகத்தில் பொறியியல் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பி இ, பிடெக், பி. ஆர்க், எம். இ, எம்.டெக், எம். ஆர்க் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ரூ.79,600 முதல் அதிகபட்சம் ரூ.1,89,800 வரை கட்டணம் நிர்ணய கலாம் என AICTE கூறியிருந்த நிலையில், அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.