தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரை காபந்து அரசு செயல்படும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பழனிசாமியின் ராஜினாமாவை ஆண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். மேலும் தமிழக சட்டப்பேரவை கலைக்கப் படுவதாகவும், புதிய அரசு அமையும் வரை காபந்து அரசு செயல்படும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.