Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய கட்டுப்பாடு…. அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசு மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படும். தற்போது நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும். மதுபானங்களை மொத்த விற்பனை செய்யக்கூடாது. 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. விலைப்பட்டியல் வாடிக்கையாளரின் பார்வையில் படும்படி தொங்க விடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

 

Categories

Tech |