தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை வெளியீடு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.