Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31க்கு முன் 40% சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்று தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

இதனை மனதில் கொண்டு தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 35 சதவீத கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் எனவும் மீதமுள்ள 25 சதவீத கட்டண வசூல் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |