துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.
இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், துணைத்தேர்வு பெரும் மதிப்பெண்களையே பிளஸ் 2 தேர்வின் இறுதியான மதிப்பெண்களாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.