Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பேருந்துகளில் ஆண்களுக்கு…. அமைச்சர் அதிரடி…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டு ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் கூறுவதுபோல் அரசு பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கபடவில்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்டு புகார் கூறினால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த ஒரு நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் சாட்ட கூடாது. மேலும் இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |