Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு புத்தம் புதுசு… மகிழ்ச்சி அறிவிப்பு…!!

சென்னை முதல் காரைக்கால் வரை விரைவில் பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகுகளில் சென்று வருவதற்கான சேவையை தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர், காரைக்கால் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் சிறு துறைமுகங்கள் அதிகம் இருப்பதால் படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேர் வரை இதில் பயணம் செய்யும் வகையில் படகு போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து சேவைக்காக சென்னை, காரைக்கால் இடையே உள்ள சிறு துறைமுகங்கள் அழகுபடுத்தும் பணியும், ஆழப்படும் பணியும் நடைபெற்று வருகின்றது. பயணிகளிடமிருந்து படகு போக்குவரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தத் திட்டம் விரிவுபடுத்த உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |