தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும் என அவர் தெரிவித்தார். இன்னும் அற்புதமான அறிவிப்புகள் தமிழக மக்களுக்காக காத்திருப்பதாக கூறிய முதல்வர் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.