இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மக்களால் அதிகம் விரும்பப்படும் முதல்வர்களின் பட்டியலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 42 சதவீத ஆதரவு பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்துடன் 2வது இடமும், கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35 சதவீதத்துடன் மூன்றாவது இடமும், 31 சதவீதத்துடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நான்காவது இடத்திலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 30 சதவீதம் பெற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.