நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்றைய டீசல் விலை எதிர்பாராமல் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீசல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.94.24- க்கு விற்பனையாகிறது. ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 65 காசுகள் உயர்ந்து ரூ.101.92- க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை குறைப்பால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று டீசல் விலை குறைக்கப்பட்டு இருப்பது தமிழக மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.