நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
மேலும் மீனவரிடமிருந்து விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை.. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் திருகோணமலை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.