நாளை தமிழகத்தின் முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒன்றாக கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.