தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்தத் திட்டத்தை ஜனவரி இரண்டாம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.