தமிழகத்தில் மொத்தம் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது.
இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் rs.2500 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜனவரி 4 ஆம் தேதி முதல் விலையில்லா வேட்டி, சேலையுடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.