காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால், அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 4×100ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தனலட்சுமி தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனலட்சுமி இந்தியாவின் முன்னணி தடகள் வீராங்கனையாவார்.