தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்தது. அதில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு படைப்புகள் அமைந்துள்ளன. அதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆனால் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சி தரும் செய்திகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழக மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு புதிய ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரையை தவிர மற்ற அனைத்து எய்ம்ஸ் மருத்துவ மனைகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியராஜன் என்பவர் ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு, அதிரையை தவிர மற்ற மாநிலங்களில் அமைய உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இன்னும் எந்த ஒரு வேலையும் தொடங்கப்படவில்லை.