Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

 சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் பெற்றவர் நெல்லை கண்ணன்.. இவருக்கு வயது 77.. நெல்லை கண்ணன் ஏராளமான நூல்களை வாசித்து பலருக்கும் அதை கடத்திச் சென்றுள்ளார். பல மேடைகளில் அவர் அதை செய்திருக்கிறார். ஏராளமான தகவல்களை அவர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு தமிழ் நூல்களை கரைத்து குடித்த பெருமை அவருக்கு உண்டு. பல மேடைகளில் மாணவர்களை எப்போதுமே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக அவரது பேச்சு தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவர் காலமாகி இருக்கிறார் என்ற சோகமான செய்தி வந்துள்ளது.

தமிழ் அவர் பேச்சில் கடல் அலையாக ஓடும்.  அவர் வீட்டுக்குள் சென்றால் எங்கு பார்த்தாலும் புத்தகம் தான்  நிறைந்திருக்கும். தமிழ் மீது தீராத பற்று கொண்டவர். இவர் அனைத்து அரசியல் தலைவர்களையுமே தெரிந்தவர். இந்த சூழலில் நெல்லை கண்ணன் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இடையில் அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார். வயது முதிர்வு காரணம், நடப்பதற்கு சிரமம் கொண்டார். அப்படி இருந்தும் பேச்சில் கொஞ்சம் கூட குறைபாடு இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக பேச்சு என்பது மெல்ல மெல்ல பேச முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |