Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் வரை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் முதல் தவணை 2000 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூன் 15ஆம் தேதி முதல் இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |