Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டின் 2-வது தலைநகர் – போடு ரகிட ரகிட…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை வைத்துள்ளார். எந்த பகுதிக்கும் 4 மணி நேரத்தில் சென்று வர முடியும் என்பதால் இரண்டாவது தலைநகராக திருச்சி அறிவியுங்கள். மேலும் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |