Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்… சற்றுமுன் புதிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டிற்கு நவம்பர் 10ஆம் தேதி ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். நவம்பர் 10ஆம் தேதி சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டில் நெருங்குகிறது.இதன் காரணமாக தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும். சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |