தமிழ்நாட்டில் நாளை நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு ,விழுப்புரம் , கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டுக்கு நெருங்குகிறது. இதனால் நவம்பர் 11ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.