தமிழகத்தில் திங்கட்கிழமை காலை ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது.
மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் மின் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.