தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. 110 விதியின் கீழ் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் 10 புதிய காவல் நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும், விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.