பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் இன்று காலமானார். இவரது இயற்பெயர் ஜெயராஜ்.புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானவர். முஸ்தபா முஸ்தபா, கல்லூரி சாலை பாடல்களுக்கு நடனம் அமைத்து கவனம் பெற்றவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories