பிரபல இளம் இசை அமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும் இசையமைப்பாளருமான எஸ்வி ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தொலைக்காட்சி மற்றும் வானொலி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய எஸ்வி ரமணன், மக்கள் தொடர்பு கலையில் மான்பாளர் என்று அழைக்கப்படுவார். இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த இவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன.இதனைத் தொடர்ந்து எஸ்வி ரமணன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.