மக்களே தயாராக இருங்கள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மு.அழகிரி ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க அழகிரி “சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாறியது நான். மதுரை நமது கோட்டை; யாராலும் மாற்ற முடியாது.
விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். அது எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் . எதையும் சந்திக்க தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்திற்கு உசிலம்பட்டியில் இருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது திமுகவினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஒருவேளை அழகிரி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் திமுகவை அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.