டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. கடும் குளிரையும் பொறுப்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். இருந்தும் மந்தமான வாக்குபதிவே பதிவாகியது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவாகியுள்ளய நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது.
டைம்ஸ் நவ் , ரிபப்ளிக் , நியூஸ் எக்ஸ் – நோந்தா ஆகிய மூன்று நிறுவனங்களும் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்னதைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மியே முன்னிலை பெற்றதால் டெல்லியில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராவது உறுதியாகியுள்ளது.
டைம்ஸ் நவ்
ஆம் ஆத்மி – 44
பிஜேபி – 26
காங்கிரஸ் – 0
ரிபப்ளிக்
ஆம் ஆத்மி – 48 -61
பாஜக – 9-21 ,
காங்கிரஸ் – 0-1
நியூஸ் எக்ஸ் – நோந்தா
ஆம் ஆத்மி 53- 57 ,
பாஜக 11-17 ,
காங்கிரஸ் 0- 2