ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் ஏற்க மறுத்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள ரிமோட் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு நேற்று அதிமுகவிற்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் (co-ordinater), இணை ஒருங்கிணைப்பாளர் (jt. co-ordinater) என பதிவிட்டு அந்த கடிதம் என்பது அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பிய அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் வாங்க மறுத்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பிய நிலையில், அந்த பதவிகளில் தற்போது யாரும் இல்லை என அதிமுக அலுவலகம் அதனை வாங்க மறுத்துள்ளது. மிக முக்கியமான விஷயமாகத்தான் இதை பார்க்க வேண்டியிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அந்த கடிதத்தை அனுப்பியநிலையில் திருப்பி அனுப்பியுள்ளனர்.