Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: தாலிபான்கள் பிடியில் 150 இந்தியர்கள் – சற்றுமுன் பரபரப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆப்கானில் 150க்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து வைத்திருப்பதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காபூலில் இருந்து வெளியே விமான நிலையத்தில் காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் பலரை தாலிபான்கள் பிடித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து மத்திய அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

Categories

Tech |