கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (வயது 89) காலமானார். சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பும், உடல்நல பாதிப்பும் இருந்த நிலையிலும் கடைசி வரை கட்சி, சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.