திருப்பதி அருகே கார் ஒன்றில் குடும்பத்தினரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories