தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளதால் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படும், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தர்மபுரி அருகே கண்ணூர்-யஷ்வந்த் பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முத்தம்பட்டி அருகே நடுவழியில் பயணிகள் ரயில் நிற்பதால் பயணிகள் 3 மணி நேரமாக தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெங்களூருவிலிருந்து மீட்புப் பணிகளுக்கான பிரத்தியேக இரயில் வந்த பின்பே தண்டவாளம் சரி செய்யும் பணி தொடங்கும். கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் தடம் புரண்டது.இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சேலம் தர்மபுரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் வந்த 1850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.