Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்… திமுகவுக்கு அடுத்த புதிய அதிர்ச்சி… பரபரப்பு…!!!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றி இழுபறி நீடித்து வருவதால் அதிமுகவுடன் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவுடன் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஈஸ்வரன் கேட்ட நிலையில், இரண்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், திடீர் திருப்பமாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Categories

Tech |