Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இணைந்தார் பத்மபிரியா…!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக இவர் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். பத்மப்பிரியாவிற்கு மக்கள் நீதி மையத்தில் வலுவான பொறுப்பு வழங்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில் இவர் விலகியுள்ளார்.

Categories

Tech |