தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக குமரி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அதேசமயம் குமரி மாவட்டம் இரணியல் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக இரணியல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பாஜக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சை 2 இடங்களையும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இங்கு திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.