முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரள அரசின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்து தண்ணீரை திறந்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து பொதுமக்கள், தொண்டர்கள் என்று பலரும் திரளாக பங்கேற்றுள்ளனர்.
Categories