Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கோட்டையாக மாறும் நாகை…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.

இந்த நிலையில் நாகை நகராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. நாகையில் திமுக 285 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், சுயச்சை 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பொன்னேரி நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 15, அதிமுக 4, சுயேச்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் திமுக 5, இடதுசாரிகள் 5, பாஜக 5, பாமக 1, சுயேச்சை 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Categories

Tech |