Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர் மு க ஸ்டாலின்… அதிரடி உத்தரவு…!!

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள் மையங்களை விட்டு வெளியே வரக்கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பல சுற்றுகளில் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. இதில் ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் பெரும்பான்மை தொகுதியை திமுக பிடித்துள்ள காரணத்தினால் திமுகவை சேர்ந்தவர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திமுக தலைவர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மையங்களை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். வெற்றி சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்தால் உடனடியாக தலைமையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |