திமுக துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. 1977இல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுப்புலட்சுமி அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவர் 1996இல் மொடக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில் இது வதந்தி என்று திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
Categories