திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பணம் பட்டுவாடா செய்யப்படும் இடங்களில் பறக்கும் படையினர் விரைந்து சென்று ரெய்டு நடத்தி வருகின்றனர். பல இடங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் திமுக நகர செயலாளர் கே எஸ் தனசேகரன், மதிமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் திருப்பூர் லட்சுமி நகர் மக்கள் நீதி மைய கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து ரைடு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கருப்பு பணம் யார் வைத்திருந்தாலும் ரெய்டு நடைபெறும் என்று எச்சரித்துள்ளார்.