Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் சுரேஷ்ராஜன், ராதாபுரம் அப்பாவு, அம்பாசமுத்திரம் ஆவுடையப்பன், நெல்லை ஏ.எல்.எஸ் லட்சுமணன், ஆலங்குளம் பூங்கோதை, தூத்துக்குடி கீதா ஜீவன், திருச்சுழி தங்கம் தென்னரசு, மதுரை மத்தி பி.டி.ஆர் பழனிவேல் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

Categories

Tech |