Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : திருச்சியில் உலகத்தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில், திருச்சியில் உலகத்தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சரானபோது உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன், விளையாட்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையை உதயநிதி மேம்படுத்துவார் என நம்புகிறேன். உதயநிதி எம்எல்ஏ ஆனபோது வந்த விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதில் தந்தார். அதேபோல் அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதில் தருவார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Categories

Tech |