திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் என்னும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 7 உறுதிமொழி திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் என்னும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் 7 உறுதிமொழி திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமான வளர்ச்சி. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு கோடி மக்கள் மீட்கப்படுவார்கள் என்று பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.