திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது அவரின் உடல் திருச்சி, சோழ மாநகரில் உள்ள இடுகாட்டில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.