Categories
மாநில செய்திகள்

BREAKING  : திருநெல்வேலி பள்ளி விபத்து…. கல்வி அதிகாரி அறிக்கை தர ஆணை….!!!!

திருநெல்வேலி பள்ளியில் ஏற்பட்ட விபத்து பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்டம்  சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வரவில்லை என்றும், பள்ளி கழிவறையை சரியாக பராமரிக்காததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது  என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் ஆய்வு செய்துவரும் நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளியில் ஏற்பட்ட விபத்து பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் கழிவறை சுவர் இடிந்து மாணவரின் இந்த விவகாரத்தில் அறிக்கை தரவேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |