திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாத யாத்திரையாக பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளையும் நாளை மறுநாளும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மிக பலத்த மழை எச்சரிக்கையை அடுத்து திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. அதனால் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் யாரும் பாதயாத்திரை செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.